அறிவியல்

img

சந்திராயன் 2 நிலவின் சுற்றுவட்டப்பதையில் சென்றது 

சந்திராயன் 2 விண்கலம் திட்டமிட்ட படி வெற்றிகரமாக நிலவின் சுற்று வட்டப்பாதையில் சென்றது.

சென்னையை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜுலை 22 ம் தேதி சந்திராயன் - 2 விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது.  3,485 கிலோ எடையுடன் சென்ற சந்திராயன் 2 விண்கலம் நிலவில் இறங்கவும், சுற்றி வரவும், ஆய்வு செய்யவும் அதிநவீன கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதுவரை, பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த அந்த விண்கலம், ஆறு முறை உயர்த்தப்பட்டு, இன்று அதிகாலை, 2.21 மணியளவில், நிலவின் சுற்று வட்டப்பாதையில் சென்றது.

இஸ்ரோ விஞ்ஞானிகள்,திட்டமிட்ட படி, சந்திராயன்- 2 விண்கலம், செப்டம்பர் 7- ம் தேதி, நிலவில் இறங்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
 

;