அறிவியல்

img

சந்திரயான்-2 திட்ட விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்புக்கு பாராட்டு

திருவனந்தபுரம்,செப்.8-  சந்திரயான்-2 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானி களின் அர்ப்பணிப்பு பாராட்ட த்தக்கது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சந்திரயான் -2 விண்கலம் இலக்கை அடையாமல் தோல்வியைத் தழுவினாலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடும் உழைப்பை  பொது மக்கள், பிரபலங்கள்,மக்கள் பிரதிநிதிகள் பாராட்டியுள்ள னர்.   இந்நிலையில் இது குறித்து கேரள முதல்வர் பின ராயி விஜயன் கூறியதாவது:  சந்திரயான்-2 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானி களின் அர்ப்பணிப்பு பாராட்ட த்தக்கது. விஞ்ஞானிகளின் கடும் உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை. சந்திரயான்-2 திட்ட த்தில் தற்போது ஏற்பட்டுள்ள சோதனை விரைவில் சரியாகி விடும் என்று தெரிவித்தார்.

;