அறிவியல்

img

சந்திரயான்-2 ஆர்பிட்டர் எடுத்த புதிய புகைப்படங்கள் வெளியீடு

பெங்களூரு, அக்.5-  நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் -2 விண்கலத்தின் ஆர்பிட்டர் எடுத்த புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளி யிட்டுள்ளது. சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத் தப்பட்டது. கடந்த 7 ஆம் தேதி விக்ரம் லேண்டரை தரை இறக்கும்போது நில வில் இருந்து சில கி.மீட்டர் தொலைவில் அதன் வேகம் அதிகரித்தது.இதனால் லேண்டர் கருவி திசைமாறி சென்று நில வின் மேற்பரப்பில் மோதி விழுந்து விட்டது. லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை.  சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள ஆர்பிட்டர் என்பது நிலவின் சுற்றுப்பாதை யில் வட்டமிடும் கருவியாகும்.இந்த ஆர் பிட்டரில் நிலப்பரப்பு மேப்பிங் கேமரா, ஆர்பிட்டர் உயர் சக்தி கேமரா  ஆகிய இரண்டு கேமிராக்கள் உள்ளன. தற்போது நிலவை சுற்றிவரும் ஆர் பிட்டர், சில முக்கிய புகைப்படங்களை எடுத்து இஸ்ரோ மையத்திற்கு அனுப்பி யுள்ளது. அந்த படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில்  இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

;