அறிவியல்

img

பூமியை படம் பிடித்து அனுப்பிய சந்திரயான்- 2

பெங்களூரு, ஆக.4- சந்திரயான்-2 விண்கலம், விண்வெளியில் இருந்து பூமி யை படம் பிடித்து அனுப்பி யுள்ளது. ஜூலை 22ஆம் தேதி விண் ணில் ஏவப்பட்ட சந்திரயான் -2 விண்கலம், வெள்ளியன்று பூமியின் நான்காவது சுற்று வட்டப் பாதைக்கு உயர்த்தப் பட்டது. சந்திராயன்- 2 விண் கலத்தின் லேண்டர், செப்டம் பர் மாதம் 7ஆம் தேதி அன்று நிலவில் தரை இறங்கவுள் ளது. இந்த நிலையில், பூமி யைச் சுற்றிக் கொண்டிருக் கும் சந்திரயான் 2 விண்கலம், பூமியை படமெடுத்து இஸ்ரோவுக்கு அனுப்பியுள் ளது. சந்திரயான்-2 இன் லேண்டரான விக்ரமில் பொருத்தப்பட்டிருக்கும் கேமிரா, பூமியை படம் எடுத்துள்ளது. அந்தப் புகைப்படங்களை இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. சந்திரயான்-2 விண்கலம் அனுப்பி உள்ள பூமியின் படங்கள் மிகத் தெளிவாக வும், அழகாகவும் இருப்ப தாக பலரும் பாராட்டுகின்ற னர்.

;