அறிவியல்

img

ககன்யான் திட்டம் : இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ரஷ்யாவுடன் இணையும் இஸ்ரோ

ககன்யான் திட்டத்தின் கீழ், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ள நிலையில், இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ரஷ்யாவுடன் இஸ்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது.

வரும் 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ககன்யான் திட்டத்தின் கீழ் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள், என்றும், வீரர்கள் 7 நாட்கள் வரை விண்வெளியில் தங்கிருந்து ஆய்வுகளை மேற்கொள்ளவர்கள் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது. இந்த திட்டத்திற்காக விமானப்படையில் பணியாற்றும் 10 பேரை இந்திய விமானப்படை தேர்வு செய்து, முதல் இரண்டு கட்ட பயிற்சி வழங்கிய பின்னர் இறுதி கட்டமாக வெளிநாடுகளில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விண்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இஸ்ரோ ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், ”ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். கடந்த 27-ஆம் தேதி, ரஷ்ய விண்வெளி ஆய்வு மைய உயரதிகாரி நடாலியா லோக்டெவாவும், இஸ்ரோ அதிகாரி உன்னி கிருஷ்ணனும் இது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்திய விமானப்படையின் கீழ் இயங்கும் விண்வெளி மருத்துவக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்க வாய்ப்புள்ளது” என்று கூறினார்.
 

;