அரசியல்

img

கற்பனைக்கு எட்டாத அளவு வேலையின்மை அதிகரிப்பு

வேலையின்மை குறித்த இத்தகைய பெரும் மனித நெருக்கடி குறித்து பிரதமரோ அல்லது எந்த அமைச்சரோ ஏன் ஒரு வார்த்தை கூட பேசுவது இல்லை. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்திருக்கும் பொழுது முறைசாரா மற்றும் அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களுக்கு ஏன் பொருளாதார நிவாரணம் அறிவிக்கப்படவில்லை?.”
 


குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களின் மருத்துவ சூழல் கவலை அளிப்பதாக உள்ளது. இந்த மாநிலங்கள் கோவிட் 19 தொற்றை விரைவில் கட்டுப்படுத்துவது என்பது மற்ற மாநிலங்களின் நலனுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.


குடோன்களில் உள்ள அரிசியை ஏழை மக்களுக்கு இலவசமாக தருவதற்கு பதிலாக கிருமி நாசினியான எத்தனால் எனும் பொருள் செய்வதற்கு பயன்படுத்த மத்திய அரசாங்கம் எடுத்துள்ள மனிதாபிமானமற்ற முடிவை கடுமையாக கண்டிக்கிறோம்.


கோவிட் 19 வைரஸ் குறித்த தரவுகளில் மத்திய அரசாங்கம் விளையாடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து பரிசோதனை நிலயங்களும் ஐ.சி.எம்.ஆர். அமைப்புக்கு நேரடியாக விவரங்களை அனுப்புகின்றன. எனவே ஐ.சி.எம்.ஆர்.தான் விவரங்களை தர முடியும். திரு. மோடி அவர்களே, வைரஸ் பாதித்த நோயாளிகளின் உயிரோடு விளையாடாதீர்கள்.

டிவிட்டரில் சீத்தாராம் யெச்சூரி
 

;