அரசியல்

img

லாக் அப்பில் சிக்கிய அப்பாவி அல்ல...

நோயிலிருந்து நாம் மீண்டு வரும்போது நமக்கு வருவது நிம்மதி. நாம் எப்படிச் சமாளித்தோம் என்கிற இறுமாப்பும், மமதையும் அல்ல. கொரோனா காலத்தில் உலகத்திலேயே பாதுகாப்பான பிரதேசங்களில் ஒன்று எனப் பலரும் உணரும் கேரளத்தின் முதல்வரும் அவரது அமைச்சர்களும் கூட கவனமாகவும் பொறுப்பாகவும்தான் பேசுகிறார்கள். சர்வதேச பத்திரிக்கைகள் அவர்களுடைய கொரொனா தடுப்பு நடவடிக்கையை பாராட்டிய பின்னரும் கூட,  இன்னும் பிர்ச்சனை முடியவில்லை என்கிற எச்சரிக்கை உணர்வுடன்தான் செயல்படுகின்றனர். எங்களின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கேரள மாடல் என்று பாராட்டாதீர்கள் என்று பினராயி விஜயனே பேசியிருக்கிறார். இது எல்லாமே நாம் அறிந்த விஷயங்கள்தாம். ஆனால் பிரதமர் மோடி, உலகமே இந்தியாவைப் பாராட்டுகிறது  என்று மூச்சுக்கு முன்னூறு முறை பேசுகிறார். (பி எம் ஓ என்கிற பிரதமர்அலுவலகத்தைச் சுற்றி வந்தால் உலகையே சுற்றி வந்தது போல்தான் என்று நாரதர்கள் சொல்லியிருப்பார்கள்) அவரது கட்சிக் காரர்களும் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடத்துவது மட்டுமே மிச்சம். மக்கள் அச்சத்திலும், வறுமையிலும் அல்லாடும் நேரத்தில் உங்கள் வக்கிரத்துக்கும், குரூரத்திற்கும் அளவே இல்லையா? Shame on you guys.
-விஜயசங்கர் ராமச்சந்திரன்

மக்களோ தங்கள் அன்றாட வாழ்வில் எந்தக் காரியத்தையும் திட்டமிடமுடியவில்லை, திட்டமிட்ட எதையும் செயல்படுத்த முடியவில்லை.அரசோ ஏற்கனவே திட்டமிட்டு செயல்படுத்த முடியாதவை, புதிதாக திட்டமிட்டவை என அனைத்தையும் ஏக காலத்தில் செயல்படுத்திக்கொண்டு இருக்கின்றது.அதிகாரம் மட்டுமே முழுவீச்சில் இயங்கும் காலம்.
- ஜா.மாதவராஜ்

கொரோனா ஒன்றும் லாக்-அப்பில் சிக்கிய அப்பாவி அல்ல. லத்தியை மட்டும் வைத்து அழித்து விட.
- மதுக்கூர் ராமலிங்கம்

;