அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் :- பொருட்களின் அளவு அடிப்படையில் 95 சதவிகித வர்த்தகம் கடல்வழியாகத்தான் நடைபெறுகிறது.ச.சா - இப்படிப்பட்ட நிலைலயும் சேதுசமுத்திரத் திட்டத்த நிறைவேத்த மாட்டேங்குறீங்களே..??
 

தமிழக அமைச்சர் செங்கோட்டையன் :- அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு நீதிபோதனை.
ச.சா - இது முதல்ல மத்திய, மாநில ஆட்சியாளர்களுக்குதான் தேவைப்படுதோ..??
 

பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா : - மேற்கு வங்கத்தில் எந்த செயலும் சட்டப்படி நடப்பதில்லை.
ச.சா - அப்படியே உங்க ஆட்சி மாதிரியே...!!
 

பிரதமர் மோடி :- ஒரு வலிமையான அரசைத் தேர்வு செய்து ஆட்சிக்கட்டிலில் இந்தியர்கள் அமர்த்தியிருக்கிறார்கள்.
ச.சா - இவரு சொல்ற இந்தியர்கள் அம்பானி, அதானியா..??ச.சா - இவரு சொல்ற இந்தியர்கள் அம்பானி, அதானியா..??

;