அரசியல்

img

புதுச்சேரியில் கடைகள் திறக்கும் நேரம் குறித்து அறிவிக்கப்படும்

 முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி, மே 5- கடைகள் திறக்கும் நேரம் குறித்த நேரக்கட்டுப்பாடு விரைவில் அறிவிக்கப்படும் என்று புதுவை முதல்வர்  நாராயணசாமி தெரி வித்துள்ளார்   இது தொடர்பாக செவ்வாயன்று (மே 5) முத லமைச்சர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: கோயம்பேடு மார்க்  கெட்டில் இருந்து புதுச்சேரிக்கு வந்த 160  பேரின் உமிழ்நீர் எடுத்து  பரிசோதனை செய்யப் பட்டதில்  யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. கடலூர், விழுப்பு ரம் பகுதிகளில் இருந்து புதுச்சேரிக்குள் வருவோரை தடுத்து நிறுத்தப்படுவார்கள். அதற்கேற்ப எல்லைகள் மூடப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றை வெகுவாக குறைந்த நிலை யில் கடைகள் திறக்கப்  பட்டுள்ளன. கட்டுக்கடங் காத கூட்டம் அலைமோது கிறது. எனவே, ஓரிரு நாட்கள் எந்தெந்த கடைகள்  எவ்வளவு நேரம் திறக்கப்ப டும் என்பது அறிவிக்கப்படும். இதனையும் மீறி மக்கள் நடமாட்டம் அதிகமானால் கடைகள் திறப்பதை மறு  பரிசீலனை செய்ய வேண்டி யிருக்கும்.  இந்தியாவின் பல பகுதி களில் இருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் புதுச்சேரிக்கு வர விரும்பினால் அவர்க ளின் கோரிக்கையை பதிவு செய்ய இணையதளம் தொடங்கியுள்ளோம். அதற்  கான செலவுகளை முதல் வர் நிவாரண நிதியில் இருந்து கொடுக்கப்படும், இவ்வாறு முதல்வர் கூறினார்.

;