அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி :- வறட்சிக்காக மத்திய அரசிடம் நிதி கோரியுள்ளோம்.

ச.சா - வறட்சி பாதித்த மக்களுக்காக... இல்லேனா பதவில இருக்குறவங்களுக்கா..??
 

செய்தி :- கடந்த மூன்றாண்டுகளாக பழங்குடியினருக்காக 6 ஆயிரத்து 955 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

ச.சா - பாஜகவின் சமூக (அ)நீதி..!!

 

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் :- தமிழகம் முன்னோக்கி செல்ல வேண்டும்.

ச.சா - அப்புறம் எதுக்கு மாநிலத்த சுடுகாடாக்குற திட்டங்களா உங்க அரசு கொண்டு வருது..??

 

செய்தி :- நிரவ் மோடியின் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம்.
ச.சா - அதுக்கே இவ்வளவு நாளா..??

;