அரசியல்

img

கொரோனா விவகாரத்தில் மதச்சாயம் பூசாதீர்: தமிழக அரசு

சென்னை ஏப்.5- தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையும் 5 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. மளிகை கடைகள் மதியம் 2 மணிவரை மட்டுமே செயல்படலாம் என்று அறிவித்து இருந்தது. இந்த நிலையில், மக்கள் அதிகளவு வெளியே எதோ ஒரு காரணத்தை கூறி சுற்றி வருவதால் அரசு நேரக்கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளது. இதன்படி, மதியம் 1 மணிவரை மட்டுமே கடைகள் செயல்படலாம் என்று அறிவித்துள்ளது.

மேலும், மக்கள் அனைவரும் நேரக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவித்து இருக்கிறது. சட்டத்தை மீறும் பட்சத்தில் இனி சட்டம் கடமையை செய்யும்.  இதனைப்போன்று தன்னார்வலர்கள் அரசுடன் இணைந்து பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தைப்பகுதியில் கூட்டம் கூடுவதை தவிர்க்க தன்னார்வலர்களை உபயோகம் செய்யவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கொரோனா விவகாரத்தில் மதச்சாயம் பூச வேண்டாம் என்றும், வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.

;