அரசியல்

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு திங்களன்று காலை பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், நாளைய தினம் (செவ்வாய்க்கிழமை) ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு ஜம்மு -காஷ்மீருக்கு நேரில் செல்லவும் அங்குள்ள மக்களை சந்தித்து பேசவும் அனுமதி வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய தேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இதுவரையிலும் ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. நானும் கூட ஸ்ரீநகருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டது என்பது, எமது கட்சியின் தலைவர் முகமது யூசுப் தாரிகாமி அவர்களது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில்  ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த பின்னர், உச்சநீதிமன்றம் அளித்த அனுமதியின்பேரில் தான் நடந்தது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் பலமுறை தடுத்து நிறுத்தப்பட்டு தில்லிக்கே திருப்பி அனுப்பப்பட்டார்கள். இன்னும் அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை எவராலும் அறிந்துகொள்ளமுடியவில்லை. ஆனால் சொந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்காத அனுமதியை ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அரசு அளிக்கிறது. சொந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்துகிற பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை காஷ்மீருக்கு வரவேற்கிறார். அவர்கள் காஷ்மீர் செல்லலாம் என்றால் ஏன் நாங்கள் செல்லக்கூடாது பிரதமர் அவர்களே?

;