செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- தொகுதி வளர்ச்சிக்காக பாஜக எம்.பிக்கள் பணியாற்றுங்கள்.
ச.சா - பழக்கமில்லாத விஷயத்தை ஏன் திடீர்னு செய்யச் சொல்றீங்க..??
 

மத்திய அரசு :- தமிழ் மொழியிலும் தபால்துறைத் தேர்வு.
ச.சா - நல்லவேளை.. மக்கள் இந்த 37 பேர ஜெயிக்க வெச்சாங்க..!!
 

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் :- நாடு முழுவதும் சில்லரை வியாபாரிகள் மக்கள் சேவை ஆற்றி வருகிறார்கள்.
ச.சா - இவங்களதான பணமதிப்பு விவகாரத்துல சீரழிச்சீங்களே..??
 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் :- வங்கிகளின் வராக்கடன் குறைந்துள்ளது.
ச.சா - தள்ளுபடி பண்ணிட்டீங்களா..??

;