அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் நட்பைப் பலப்படுத்துவதே நோக்கம்.
ச.சா - ஆனா அது நம்ம விவசாயத்த அழிச்சு செய்ய வேண்டியதில்லையே..?
 

மத்திய அமைச்சர் முரளிதரன் :- தமிழகத்தில் சில கட்சிகளின் நடவடிக்கைகள் முரண்பாடாகவே உள்ளன.
ச.சா - ஆமா நீங்க மட்டும்தான் முரண்பாடு இல்லாம, கலவரம் வந்தா கட்சிய வளர்க்கலாம்னு முனைப்பா இருக்கீங்க..!!
 

தமிழக அமைச்சர் வேலுமணி :- கட்சி வித்தியாசமின்றி நலத்திட்ட உதவிகள்.
ச.சா - பாஜக, பாமக, தேமுதிகவயும் கவனிச்சுருவீங்களோ..??
 

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் :- என்னை தில்லிக்கு வருமாறு பிரதமர் அழைத்தது உண்மைதான்.
ச.சா - அடேங்கப்பா.. இதுதான் உங்க அதிகபட்ச எதிர்பார்ப்போ..??

;