அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி : காஷ்மீர் வளர்ச்சிக்கு எதிரான தடைகள் நீக்கம்.
ச சா - ‘தடைகள்’னு நீங்க சொல்ற எதுவுமே இல்லாத உத்தரப்பிரதேசம் ஏன் வளரல..?!?
 

செய்தி :- காஷ்மீர் விவகாரத்தில் தனது நிலையை ஐக்கிய ஜனதாதளம் மாற்றிக் கொண்டுள்ளது.
ச.சா - பீகார்ல ஆட்சி தொடரணுமே...?!?
 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி:- அரசின் திட்டப்பணிகளை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர்கள் மாதாமாதம் அறிக்கை அனுப்ப வேண்டும்.
ச சா - அந்த அறிக்கைகள ஆய்வு பண்ண ஒரு குழு போடுவீங்க.. உங்க ஆட்சியே முடிஞ்சுரும்..!!!
 

செய்தி :- ரயில்வேயில் கட்டாய ஓய்வுத் திட்டம் அமலாகிறது.
ச.சா - வேலைவாய்ப்பு உருவாக்குறதா சொன்ன அரசு, இருக்குறத புடுங்குதே...??!

;