அரசியல்

img

சந்தேகம் சந்தேகம்

பிரதமர் மோடி :- 5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதில் மாநிலங்களுக்கும் பங்குள்ளது.
ச.சா - பழி போடுறதுக்கு ஆட்கள தயார் பண்ணிட்டாங்களோ..?!?
 

செய்தி :- யுரேனியம் செறிவூட்டலை ஈரான் துவங்கியதற்கு பிரான்ஸ் கண்டனம்.
ச.சா - ஒப்பந்தத்த முறிச்சுக்கிட்ட அமெரிக்காவக் கண்டிக்கலையே...?!?
 

தேமுதிக பொருளாளர் பிரேமலதா:- உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.
ச.சா - நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள மறந்துட்டாங்களோ..?!?
 

மருத்துவக் கவுன்சில் :- வருங்காலத்தில் குளறுபடிகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும்.
ச.சா - இப்போ நடந்தது உண்மைதானே..?!?

;