அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் அதிமுக வெற்றி பெறும்.
ச.சா - வேலூர்ல ஜெயிச்சுட்டோம்னு சொல்லிக்கிட்டீங்களே.. அது மாதிரியா..?!?
***********
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் :- பெண் குழந்தைகள் முன்னேற்றத்தில் மிக அக்கறையுடன் பாஜக செயல்படுகிறது.
ச.சா. - உ.பி. எம்.எல்.ஏ, செங்கர் விவகாரம், காஷ்மீர்ல ஆசிபா படுகொலை எல்லாம் இதத்தான் காட்டுதோ..?!?
***********
தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி:- என்னைப் பொறுத்தவரையில் நாங்கள் அடைந்தது தோல்வியில்லை.
ச சா - இன்னும் மோசமா தோத்தாதான் ஒத்துக்குவாரோ..?!?
***********
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா :- நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்.
ச.சா - கட்டிட காண்டிராக்ட் அதானிக்கா..??

;