அரசியல்

img

நீட் தேர்வை ரத்துசெய்க: ஸ்டாலின்

சென்னை, மே 6- முறையற்ற வகையில் நடைபெறும் ‘நீட்’ தேர்வை, இந்த கொரோனா காலத்திலும் நடத்தாமல் மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும்; மாநில அரசும் இத்தேர்வைக் கட்டாயம் எதிர்க்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டா லின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

மத்திய அரசு ஜூலை 26ஆம் தேதி ‘நீட்’  தேர்வு நடைபெறும் என அறிவித் திருப்பது,  மாணவர்களை பற்றியோ, அவர் தம் பெற்றோர்களைப் பற்றியோ, மத்திய அர சுக்குத் துளியும் அக்கறையோ கவலையோ இல்லை என்பதைக் காட்டுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிக மாகி வருகிறது.

மகாராஷ்டிரா, குஜராத், தில்லி, ராஜஸ்  தான், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரப்  பிரதேசம், பஞ்சாப், ஒடிசா, கர்நாடகா, ஜம்மு  காஷ்மீர் ஆகிய மாநிலங்க ளில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் நீட் தேர்வுக்கான தேதியைக் குறிக்கிறார்கள் என்றால், இது என்ன மாதிரியான மனநிலை என்பது புரிய வில்லை. நாடு இப்போது இருக்கும் பதற்ற மான சூழலில், என்ன மனநிலையுடன் மாண வர்களால் இந்தத் தேர்வுக்குத் தயார்ப்ப டுத்திக்கொண்டு எழுத முடியும்? நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் போன்றவை  நடந்துள்ளது. முறையற்ற ஒரு தேர்வை, இந்தக் கொரோனா காலத்தில் நடத்தாமல் மத்திய அரசு ஒத்தி வைக்க வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவை இரண்டு முறை தீர்மானம் போட்டு அனுப்பியுள்ளதால், மாநில அரசும், இத்தேர்வைக் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;