வெள்ளி, ஆகஸ்ட் 7, 2020

அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் :- வரி ஏய்ப்பு செய்ய நினைக்கிறவர்களை விடாதீர்கள்.
ச.சா - பிடிச்சு பாஜகவுல சேத்துரணுமா..??
 

கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா :- ஆட்சி அமைக்க தேசிய தலைமையின் அனுமதிக்கு காத்திருக்கிறேன்.
ச.சா - பண்ணியிருக்குற செலவுக்கு அனுமதி தராமலா போயிருவாங்க..??
 

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் :- காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
ச.சா - அப்புறம் எதுக்கு பஞ்சாயத்து பண்ணுங்கனு டிரம்ப் கிட்ட மோடி கேட்டாரு..??
 

மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் :- எவ்வளவு கருப்புப்பணம் இருக்கிறது என்று அரசுக்குத் தெரியாது.
ச.சா - வெளிநாட்டு கணக்குல இருக்குறதெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்குறதுனு அருண் ஜெட்லி சொல்லிட்டாரே..??

;