அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

செய்தி :- 30 மாதங்களில் ஜியோ சந்தாதாரர்களின் எண்ணிக்கை 30 கோடியைத் தாண்டியது.


ச.சா - பொதுத்துறை பிஎஸ்என்எல்-லைக் காவு கொடுத்து மோடி செய்த சாதனை..!!


டாக்டர் கிருஷ்ணசாமி: ஈரோட்டைச் சேர்ந்தவர் ஒரு சின்னத்தில் நிற்க வேண்டும் என்றால் அக்கட்சியின் உறுப்பினராக வேண்டும். 


ச.சா - இவரு அதிமுக உறுப்பினர் ஆயிட்டாரா..??


பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ் :- தேர்தலை சந்திக்காமலேயே ஆட்சியைப் பிடிக்க திமுக திட்டம்.


ச.சா - அதெல்லாம் உங்க சாதனை.. அருணாச்சலப் பிரதேசத்துல ஆட்சியப் பிடிச்சீங்களே..!!


செய்தி :- மத்திய அரசு உயர் அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளுக்கு அனுமதி தராமல் அரசு இழுத்தடிப்பு.


ச.சா - ஊழல ஒழிக்குறேன்னு சொல்லிட்டு, ஊழல் வழக்குகள ஒழிக்குறாங்களோ..??



;