அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

செய்தி :- சர்ச்சைக்குரிய பேச்சுக்கு நடவடிக்கை எடுக்க தாமதமாவதில் தேர்தல் ஆணையம் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.


ச.சா - தாமதமா..? செயற்கைக்கோள் ஏவியது பற்றி பிரதமர் அறிவிச்சப்ப, ஆமா, விதிய மீறிட்டார்னு சொல்லிட்டு நகர்ந்துட்டாங்களே..??


தேர்தல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா:- வாக்குக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தனிப்படை.


ச.சா - பணம் குடுக்குறதுக்கே தனிப்படை அமைத்து ஆளும்கட்சி வேலை செய்யுறதா சொல்றாங்களே..??


பாஜக மாநில செயலாளர் கே.டி.ராகவன்:- மாநிலத்துக்கு மாநிலம் எதிர்க்கட்சிகளின் கூட்டணி மாறுகிறது.


ச.சா - மாநிலங்களின் தன்மை மாறுபடுறதுனால அப்புடி இருக்கு.. இங்க ஒரே மேடைல ஒருத்தர் நீட் வேணுன்னும், இன்னொருத்தர் வேணாம்னும் பேசிக்குறீங்களே..??

;