அரசியல்

img

உயிரற்ற உடலும் செயலற்ற அரசும் இருந்து என்ன பயன்?

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதிச் சட்டம் இந்தியாவில் சுமார் 13 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. ஆனால் சட்டவிதிகள் சட்டத்தில் சொல்லியுள்ள படி அமலாக்கப்படவில்லை. குறிப்பாக தமிழ் நாட்டில் சட்டம் சட்டமாக உள்ளது. அதிகாரிகள் என்ன நினைக்கிறார்களோ அதுமட்டுமே நடக் கும். எங்கே சட்டம் குறித்து விழிப்புணர்வு உள்ளதோ போராட்டம் நடக்கிறதோ அங்கே மட்டும் போராடுகிற மக்களை ஏமாற்றுகிற சில வற்றை வாக்குறுதியாக கொடுப்பார்கள். ஒன்றி ரண்டு நாட்கள் நடக்கும். பின் பழைய நிலை மையே தொடரும் இதுதான் தமிழ்நாட்டில் இன்றுவரை நீடித்து வருகிறது. வருடத்தில் நூறுநாள் வேலை ஒவ்வொரு குடும்பத்திற்கும் தர வேண்டும் என்பது சட்டம். ஆனால் நாற்பது நாட்கள் மட்டுமே தமிழ்நாடு முழுவதும் வேலைவழங்கப்படுகிறது. இது அரசு அளித்துள்ள புள்ளி விபரம். இப்போது சுழற்சி முறையில் வேலை என்ற அடிப்படை யில் வேலை நாட்களையும் சுருக்கிவிட்டார்கள். ஒவ்வொருவருக்கும் அரசு தீர்மானித்த சட்டக் கூலி தர வேண்டும். அதற்கான முறையில் வேலைநேரம் வேலையின் அளவை ஒழுங்கு படுத்தி சட்டக்கூலி வழங்க வேண்டும், இதற்கான நிர்வாக ஏற்பாடுகளை மாநில அரசு செயல்படுத்த வேண்டும் இது சட்டம். ஆனால் தமிழ்நாட்டில்  இதற்காக எந்த நிர்வாக ஏற்பா டும் சட்டக்கூலியை உருவாக்கப்படவில்லை.  பஞ்சாயத்து யூனியன் அதிகாரிகள் தீர்மா னித்தபடிதான் நடக்கும். வாரம் ஒரு நாள் கூலி வழங்க வேண்டும் என்பது சட்டம். தமிழ்நாட்டில் அல்லது வேறு சில மாநிலங்களிலோ ஆறு மாதத்திற்கு மேல் சம்பளம் தராமல் நிறுத்தி வைக்கப்படும். ஒரு மத்திய சட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும்.

அதை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். இந்தியாவில் பல மாநில அரசுகள் இதை செய்யாது. மத்திய அரசு இதை கண்காணித்து செயல்படுத்து வதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது. பின் சட்டம் எதற்கு? ஒரு தொழிலாளி வேலை கேட்டு மனு கொடுத்தால் 15 நாட்களுக்குள் வேலை தர வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட தொழிலாளிக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் இது சட்டம். ஆனால் தமிழ்நாட்டில் வேலை கேட்டு மனு கேட்டு போராடினால் போராட் டத்தை தவிர்க்க இரண்டு நாட்களோ மூன்று நாட்களோ வேலை தரப்படும். பின்பு வேதா ளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள் ளும். வறட்சி, புயல், சேதம் என்றால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் 150 நாட்கள் வேலை தர வேண்டும் என்பது சட்டம். ஆனால் தமிழ்நாட் டில் இதுபோன்ற நிலை ஏற்பட்டால் சம்பந்தப் பட்ட பகுதியில் விவசாயத் தொழிலாளர்களோ அல்லது அரசியல் கட்சிகளோ 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்று கேட்டுப் போராடினால் அப்போது அரசு அறிவிக்கும். ஆனால் அறிவித்ததை அமல்படுத்த எந்த நட வடிக்கையும் மேற்கொள்ளாது. 2013ல் தமிழகத்தையே வறட்சி என்று அறிவித்தது. ஆனால் 150 நாட்கள் வேலையை எந்த மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படுத்த தமிழக அரசு முயற்சி மேற்கொள்ளவில்லை. கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிக் கப்பட்ட பொழுது 150 நாட்கள் வேலை என்று அறிவித்தது. அது பெரும்பகுதியான இடங்க ளில் அமலாக்கப்படவில்லை.

இப்பொழுது தமி ழகத்தில் 24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக் கப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது. குடிப்பதற்கு கிராமப்புறங்களில் தண்ணீர் இல்லை என்று காலிக்குடங்களோடு பெண்கள் ரோடுகளில் மறியல் செய்யும் காட்சி பத்திரி கைகளிலேயே தொலைக்காட்சிகளிலே நாம் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வறட்சி நிவாரணப் பணிகள் தமிழ கத்தில் எங்கும் துவக்கப்படவில்லை. 150 நாள் வேலையும் எங்கும் வழங்கப்படவில்லை. இன்னும் சொன்னால் தமிழ்நாட்டில் இந்தாண்டு ஜனவரியிலிருந்து இதுவரை நூறு நாள் வேலைத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள் ளது. சில பஞ்சாயத்துகளில் தூய்மைப் பணி, மரம் நடுதல், மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுதல் என்ற பெயரில் பத்து பேர், இருபது பேருக்கு மட்டும் வேலை வழங்கப்படுகிறது. இந்த நிலை தொடரும் என்றால் பின் மத்திய சட்டம் எதற்கு என்ற கேள்விதான் மக்களிடம் எழுந்துள்ளது. கிராம சபைக் கூட்டங்களை நடத்தி அதில் பஞ்சாயத்தில் செய்ய வேண்டிய வேலைகள், அதற்காக ஒதுக்கப்பட வேண்டிய நிதி, இதை அமல்படுத்துவதற்கான நிர்வாக ஏற்பாடு இவை கள் குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அப்ப டிப்பட்ட முறையான கிராம சபைக் கூட்டம் நடப்பதில்லை. பஞ்சாயத்து கிளார்க்கு என்ன நினைக்கிறாரோ அது அங்கே அமலாகும். ஒரு மத்திய சட்டத்தை மீறி ஒரு கிளார்க் என்ன நினைக்கிறாரோ அதுதான் நடக்கும் என்றால் அதை மத்திய - மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கும் என்றால் பின் சட்டம் எதற்கு? இந்த ஆண்டு ஜனவரி 26ந்தேதி நடத்திய வேண்டிய கிராமசபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்பட வில்லை.

செய்ய வேண்டிய வேலைகள் குறித்தோ, நிதி ஒதுக்கீடு குறித்தோ எந்த முடிவும் எடுக்கப் படாத காரணத்தினால் மார்ச் மாதத்திலிருந்து செய்ய வேண்டிய வேலைகளுக்கான நிர்வாக ஆணை (ஏ.எஸ்.) என்பது தீர்மானிக்கப்படாமல், தொகை ஒதுக்கப்படாமல் இதுவரை பஞ்சா யத்துகளில் வேலை நடக்கவில்லை. மே 1ந்தேதி நடக்க வேண்டிய கிராம சபைக் கூட்டம் நாடாளுமன்றத் தேர்தலின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஆறுமாதமாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத் திட்டப் பணிகள் நடக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் வறட்சி, ஏற்கெனவே மத்திய- மாநில அரசுகளின் கொள்கையினால் விவசாயங்கள் சீரழிந்து, விவசாயத்தின் மூலம் விவசாயத் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைகள் கிடைக்கவில்லை. இந் நிலையில் நூறுநாள் வேலைத்திட்டம் வறட்சி யின் காரணமாக அது 150 நாள் வேலைத்திட்ட மாக மாறினால் ஓரளவு வேலை கிடைக்கும். சட்டக்கூலி கிடைத்தால் அரைவயிற்றுக் கஞ்சிக் காவது வழி கிடைக்கும். ஆனால் இது எதுவுமே நடக்கவில்லை என்றால் அரசும் நிர்வாகமும் மக்களுக்காகவா அல்லது அதிகாரமும் பதவி களும் இவர்களுடைய சுயநலத்திற்காகவா என் பதுதான் பொதுமக்களிடம் எழுந்துள்ள கேள்வி.

தமிழ்நாட்டில் சட்டக்கூலி என்பது ரூபாய் 229 தினம் வழங்க வேண்டும். ஆனால் இது தமிழ்நாட்டில் ஒரு பஞ்சாயத்திலாவது அமலா னது என்று அரசு சொல்ல முடியுமா? நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் காலங்களில் விவசாயத் தொழிலாளிகள் அனைவரும் வாக்களிக்க வர வேண்டும் என்பதற்காகவும், வாக்குப்பதிவு அன்று வேலைக்குச் செல்ல வில்லை என்றால் அவர்களுக்கு கூலி கிடைக் காத நிலைமையும் அதனால் குடும்பத்தில் வரு வாய் இழப்பும், கஷ்டமும் ஏற்படும் என்ற கார ணத்தினால் மத்திய அரசு 2016ல் வாக்குப்பதிவு நாளன்று ஜாப்-கார்டு வைத்திருக்கக்கூடிய அனைத்து விவசாயத் தொழிலாளிகளுக்கும் விடுப்புடன் கூடிய சம்பளம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் இது இந்தியாவிலோ, தமிழ்நாட்டிலோ எங்கும் அமல்படுத்தவில்லை. தமிழக அரசிடமோ அதி காரியிடமோ இதுகுறித்து நாம் கேட்கிற காலத் தில் தேர்தல் நாளுக்கு முதல் நாள் யாருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கிறதோ அவர் களுக்கு மட்டும்தான் விடுப்புடன் கூடிய சம்ப ளம் என்று அதிகாரிகள் விளக்கமளிக்கிறார்கள். தமிழகத்தில் பஞ்சாயத்துகளில் பெரும்பகுதி வேலையே வழங்கப்படாமல் இருக்கிறபோது, தேர்தலுக்கு முதல் நாள் வேலைக்கு சென்ற வர்களுக்கு மட்டுமே சம்பளம் என்று சொன் னால் தமிழகத்தில் இருக்கக்கூடிய 95லட்சம் விவசாயத் தொழிலாளர்களுக்கு எப்படி மத்திய அரசு அறிவிப்பு அமலாகும்.

அதுவும் வாக்களிக்க மக்களை ஏமாற்றுகிற ஒரு அறி விப்பாகவே உள்ளது. கூலித் தொழிலாளர்கள் அனைவருக்கும் குறிப்பாக ஜாப்-கார்டு வைத்திருக்கக்கூடிய அனைவருக்கும் விடுப்புடன் கூடிய சம்பளம் வழங்க வேண்டும் என்கிற நியாயம் அர சுக்கோ அதிகாரிக்கோ ஏன் மண்டையில் பதி வாக மறுக்கிறது. இவைகளுக்கெல்லாம் அடிப் படை உழைக்கின்ற மக்களின் நலன் சார்ந்து போடப்படுகிற சட்டத்தை அமல்படுத்துகிற அரசும் இல்லை. அதிகாரிகளும் இல்லை. நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டத்தைப் பற்றி பேசாத அரசியல் கட்சிகளே இல்லை. மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுங்கட்சிகள், எதிர்க்கட்சிகள் என்று எல்லாத் தரப்பினரும், தங்களது பிரச்சார மேடையில் நூறு நாள் வேலைத்திட்டத்தை பாதுகாப்போம், அதை 150நாள், 200 நாள் வேலையாக மாற்றிட சட்டத் திருத்தத்தை கொண்டுவர முயற்சிப்போம். சட்டக்கூலிகளை 400 ரூபாயை 500 ரூபாயாக விலைவாசியின் காரணமாக உயர்த்தி வழங் கிட நடவடிக்கை எடுப்போம் என்று பேசாத கட்சிகளே இல்லை. மகாத்மா காந்தியின் நூறு நாள் வேலை சட்டத்தை மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் ஒழித்துக் கட்டிட நினைத்த பிஜேபி கூட இந்தத் தேர்தல் கால பிரச்சாரத்தில் நூறு நாள் வேலையை நாங்கள் பாதுகாத்து சட்டக் கூலியை வழங்கிடுவோம், கிராமப்புற விவ சாயத் தொழிலாளிகளுக்கு வாழ்வாதா ரத்திற்கான வருவாய் கிடைக்கும் இந்த நூறு நாள் வேலை சட்டத்தை முழுமையாக அமல் படுத்துவோம் என்று பேசினார்கள்.

தமிழகத்தில் ஆளுகிற அதிமுகவும் இந்த தேர்தல் பிரச்சா ரத்தில் இதே பிரச்சாரத்தை செய்தது. ஆனால் இதனுடைய நோக்கம் விவசாயத் தொழிலாளி களை பாதுகாப்பதற்காக அல்ல, கிராமப்புறங்க ளில் வேலையும், வருவாயும் இழந்து வாழ முடி யாமல் கிராமங்களை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கக்கூடிய அந்த உழைப்பாளிகள் மத்திய - மாநில ஆட்சியாளர்களின் மீது ஏற்பட்டுள்ள கடும் கோபம் எங்கே தங்களுக்கு எதிராக போய்விடுமோ என்ற காரணத்தினால் தேர்தல் நேரத்தில் அவர்களை ஏமாற்று வதற்காக அவர்களின் ஓட்டுக்களை பெறுவ தற்காக ஒரு போலி நாடகத்தை இந்தப் பிரச்சா ரத்தில் நடத்தினார்கள். மொத்தத்தில் இந்தியா வில் உள்ள 20 கோடிக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளிகளின் வறுமை நிலையை ஓரளவு போக்கிடும் இந்த கிராமப்புற வேலை உறுதி சட்டம் என்பது ஆட்சியாளர்களால் அமல் படுத்தப்படவில்லை. அதன்மீது அக்கறை இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் இப்பொ ழுது பயன்படுத்துகிற விதமாக ஒரு போலியான நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவிலும் தமிழகத்திலும் இந்தக் கோடிக் கணக்கான மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு இந்த அரசுகளுக்கு எதிராக கண்டிப்பாக வெடிக்கும். அதனுடைய ஒரு பகுதி யாகத்தான் மேலே நாம் குறிப்பிட்டுள்ள அரசு அமல்படுத்தாத சட்டவிதிகளை அறிவிப்பு களை அமல்படுத்த வேண்டும் என்று கோரி தமிழகத்தில் உள்ள பிடிஓ(பஞ்சாயத்து யூனி யன் அலுவலகம்) அலுவலகங்களுக்கு முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்து காத்திருக்கும் போராட்டத்தை நடத்துவது என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. கிராமப்புற உழைப்பாளி மக்களே ஏமாற்றுக்காரர்களை எதிர்த்துப் போராடுவதன் மூலமே நமது வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும்.

;