அரசியல்

img

நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை, ஏப்.30- மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடி வெடுப்பதற்காக வரும் மே 2 ஆம் தேதி முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்ச ரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறி விக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மார்ச் 24 ஆம்  தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை ஊடரங்கு அமல்ப டுத்தப்பட்டுள்ளது. ஊடரங்கு அமலில் இருந்தா லும் பொதுமக்களில் வெளியே சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

தாயாருக்கு காவல்துறையினர் அபராதம் மற்றும் நூதன தண்டனை விதித்தாலும், நாளுக்கு  நாள் பொதுமக்கள் வெளியே வருவது அதிகரித்துக்  கொண்டே வருகிறது. குறிப்பாக ஊரடங்கு பிறப்பிக்  கப்பட்டு 37 நாட்கள் ஆன பிறகும் தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது வரை கட்டுக்குள் வர வில்லை. இதனிடையே ஊரடங்கு மீண்டும் நீட்டிக்  கப்படுமா?, சில தளர்வுகள் இருக்குமா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் மே 3 ஆம் தேதி ஊரடங்கு முடி வுக்கு வர உள்ள நிலையில், வரும் மே 2 ஆம் தேதி  மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த ஆலொசனைக் கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை அறிவிக்க உள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்பாக, ஒவ்வொரு மாவட்டத்தின் நிலவரம் குறித்து ஆட்சி யர்களிடம் தமிழக அரசு அறிக்கை கோரியுள்ளது. இந்த அறிக்கைகளை ஓரிரு நாள்களுக்குள் அனுப்பி  வைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது. இந்த அறிக்கைகளை ஆராய்ந்து அதற்கேற்ற வகையில்  மாவட்ட வாரியாக ஊரடங்கை தளர்த்துவது குறித்த  முடிவுகளை தமிழக அரசு எடுக்க உள்ளது. இதனிடைய மத்திய உள்துறை அமைச்சகம்  மே 4 ஆம் தேதிக்கு பிறகு நோய் குறைவாக உள்ள  பகுதிகளில் ஊரடங்கை தளர்த்த புதிய வழிகாட்டும்  விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

;