செவ்வாய், செப்டம்பர் 17, 2019

அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு...

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
ச.சா - பழசுக்கு பெயிண்ட் அடிச்சதுதான் அதிகமாம்...!!!

செய்தி :- தமிழகத்தில் தொழில் துவங்க அமெரிக்கர்கள் விருப்பம்.
ச.சா - இப்பவே தேர்தல் பிரச்சாரம் துவங்கிருச்சா..?!?

தெலுங்கானா ஆளுநராகவிருக்கும் தமிழிசை சவுந்தர்ராஜன் :- ஒரு வாரத்தில் தெலுங்கு கற்றுக் கொள்வேன்.
ச சா - சாத்தியமானதைப் பேசுறதில்லைனு முடிவோ...?!?

அமெரிக்க அரசு : - முகநூல் நிறுவனத்துக்கு எதிராக விசாரணை.
ச.சா - கருத்துச் சுதந்திரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிப்பாங்களோ..?!?

;