அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் : - காஷ்மீரில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும்.
ச.சா - ஆனா அதிகாரத்தையெல்லாம் மத்தில குவிச்சுட்டீங்களே..?!?
 

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் :- ஜம்மு காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசுக்கு முழு ஆதரவு.
ச.சா - உங்க அரசுக்கு கூடுதல் அதிகாரம் கேக்குற தார்மீக உரிமை போச்சே...?!?
 

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி :- கேட்டுக் கிடைக்காத நிலையில் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம்.
ச.சா - அடுத்த ரெய்டு பட்டியல்ல இவர் பெயர் இருக்குமோ...?!?
 

பாஜக :- காஷ்மீர் குறித்து தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம்.
ச.சா - இத விட முக்கியமான பல வாக்குறுதிலாம் 2014 அறிக்கைலயே குடுத்தீங்களே.. என்ன ஆச்சு..?!?

;