அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத் :- வெளிநாடுகளுக்குச் சென்று 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்களை துவங்க நமது முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்
ச.சா - எட்டாயிரம் கோடி ரூபாய்னு அவர் சொன்னாரே..??

மத்திய அமைச்சர் ஜவடேகர் :- எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர் சிறையில் இருப்பதற்கு நீதிமன்றமே காரணம்.
ச.சா - காஷ்மீரே சிறையாக மாறு னதுக்கு யாரு காரணம்..??

புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ண சாமி :- தேர்தல் குறித்து கூட்டணிக் கட்சி யினருடன் அதிமுக ஆலோசனை நடத்தி யிருக்க வேண்டும்.

ச.சா - கவலைப்படாதீங்க.. இடைத்தேர்தலுக்குப் பிறகு மொத்தமா தோல்வி குறித்து பேசிருவாங்க..!!

 

 செய்தி :- தேசிய விவகாரங்களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய பாஜக முடிவு.
ச.சா - தோத்த பிறகு உள்ளூர் பிரச்ச னைகள்தான் காரணம்னு சொல்லிரு வாங்களே...!!

;