அரசியல்

img

அரசியல் நையாண்டி : சந்தேகம் சாமிக்கண்ணு

செய்தி :- சிபிஐ சோதனையில் 7 ஆயிரம் கோடி மோசடி தொடர்பான ஆவணங்கள் சிக்கின.
ச.சா - மோசடி செஞ்சவங்க சுதந்திரமா சுத்திட்டுதான இருக்காங்க..?!?

*****

கர்நாடக முதல்வர் எடியூரப்பா :- என்னைப் பார்க்க வருபவர்கள் செல்போன்கள் கொண்டு வரக்கூடாது.
ச.சா - பேசுனது உண்மைதான்னு ஒப்புதல் வாக்குமூலம் தர்றாரோ..??

*****

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்:- கட்டுமானத்துறை சரிவால் பல முக்கியமான துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
ச.சா - பெரு நிறுவனங்களுக்கு மட்டும் கோடி, கோடியா உடனடியா அள்ளிக் குடுத்தீங்களே..?!?

*****

மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் :- மாட்டிறைச்சி சாப்பிடுவோர் நாய் இறைச்சி உண்ணலாம்.
ச.சா - சொந்த அனுபவமோ..?!?

;