அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- வேலூர் தேர்தல் முடிவு அதிமுகவின் செல்வாக்கை உணர்த்தியுள்ளது.
ச.சா - ஒட்டுமொத்த அரசு எந்திரத்த குவிச்சாலும் வெற்றி வாய்ப்பில்லனு உணர்த்திருக்கோ..??
 

செய்தி :- வாகனத் தயாரிப்புத் துறையில் 3.5 கோடித் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம்.
ச.சா - இருக்குற ஜனநாயக அமைப்புகள சீர்குலைக்கத்தான் அரசால நேரம் ஒதுக்க முடியும்..!!!
 

பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி :- மெகா கூட்டணியினர் ஏமாற்றி விட்டார்கள்.
ச.சா - உங்களுக்காக இடதுசாரிக் கட்சிகள சேர்க்காம விட்டு அந்தக் கூட்டணிதான் ஏமாந்து போயிருக்கு..!!
 

செய்தி :- என்.டி.டி.வி. நிறுவனர் பிரணாய் ராய் வெளிநாடு செல்வதிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டார்.
ச.சா - கடனைத் திருப்பிக் கட்டுனவ ரெல்லாம் போகக்கூடாது.. கட்டலைன்னா பத்திரமா அனுப்பி வெப்பாங்க..!!

;