அரசியல்

img

சந்தேகம் சந்தேகம்

தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் :- யாராக இருந்தாலும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல.

ச.சா - தப்பே பண்ணாதவங்க எதுக்கு வழக்க சந்திக்கணும்...!!??
 

பொருளியல் நிபுணர்கள் :- 5 லட்சம் கோடி டாலர் இலக்கை அடைய ஏற்றுமதியில் அதிக வளர்ச்சி அவசியம்.
ச.சா - நாட்டுல இருக்குற சாதாரண மக்களோட பொருளாதார வளர்ச்சி அவசியமில்லையா..??
 

தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத் :- அதிமுக அரசுக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்.
ச.சா - அதுக்கு நீங்க மக்களுக்கு துணையா இருந்துருக்கணுமே..??
 

பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் :- காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் தடுப்புக்காவலில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளனர்.
ச.சா - அதென்ன “மட்டுமே”...  யாராவது பாக்கணும்னா உச்சநீதிமன்ற அனுமதி வாங்க வேண்டியிருக்கே..??

;