அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

செய்தி :- தடையில்லா வர்த்தகத்தில் சேர இந்தியா மறுப்பு.
ச.சா - நாடு முழுக்க விவசாயிகள் கொந்தளிச்சுப் போய் இருந்தாங்கள்ல..!!
 

தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜன் :- அவரவர் விருப்பப்படி திருவள்ளுவரைப் பார்ப்பதில் தவறில்லை.
ச.சா - மதவெறிச் சாயம் பூசுறத தமிழகம் அனுமதிக்காதே..??
 

செய்தி :- ஜம்முவில் அரசு அலுவலகங்கள் திறப்பு.
ச.சா - இவ்வளவு நாளா அரசு அலுவலகங்களே இயங்காம இருந்துருக்கே..!!
 

தமிழக அமைச்சர் அன்பழகன் :- உள்ளாட்சித்  தேர்தல் வருவதால் மக்கள் குறைகளைக் கேட்டு 20 நாட்களுக்குள் கட்சிக்காரர்கள் தீர்த்து வைக்க வேண்டும்.
ச.சா - தேர்தல் நடந்துருமோ..??

;