அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

மத்திய அமைச்சர் அமித் ஷா :- மொபைல் சேவைகள் இன்னும் 20 அல்லது 25 நாட்களில் சரி செய்யப்படும்.
ச.சா - அப்புறம் எப்புடி சுமூக வாழ்க்கை திரும்பிருச்சுனு செய்தி குடுக்குறீங்க..?
 

செய்தி :- கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் கைது.
ச.சா - அங்க பாஜக ஆட்சிக்கு வரவிடாம தடுக்க முயற்சி பண்ணுனவராச்சே அவர்..??
 

செய்தி :- காஷ்மீர் பஞ்சாயத்து தலைவர்களுக்கு இன்சூரன்ஸ்
ச.சா - நிலைமை சரியா இருக்குன்னா, இவங்களுக்கு எதுக்கு சிறப்பு இன்சூரன்ஸ்..??
 

செய்தி : ஏழாவது மாதமாக வாகனங்கள் உற்பத்தியை மாருதி சுசுகி குறைத்தது.
ச.சா - பிரதமர் விருது வாங்குறதுல மும்முரமா இருக்காரே..!!

;