அரசியல்

img

எட்டு வழிச்சாலை: மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு

புதுதில்லி, ஆக. 7 - 8 வழிச்சாலை அமைப்பதற்கான தடையை நீக்கக் கோரிய மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதி மன்றம் புதனன்று (ஆகஸ்ட் 7) நிரா கரித்துள்ளது. சென்னை - சேலம் இடையே ரூ.10  ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழிச் சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வரு கின்றன. இதை எதிர்த்து விவசாயி கள் தொடர்ந்த வழக்கில் 8 வழிச் சாலைக்குத் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்துத் திட்டச் செயல் இயக்குநர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணையில் இருந்து வருகிறது. ஜூலை 22ஆம் தேதி விசார ணைக்கு வந்த போது இந்த திட்ட த்துக்குத் தமிழகத்தில் எதிர்ப்புத் தெரி விக்கப்பட்டால் வேறு மாநிலத்துக்கு மாற்றலாமே என்று யோசனை வழங்கியதுடன் வழக்கை ஜூலை 31ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஜூலை 31ஆம் தேதி அன்று 8 வழிச் சாலையின் பயன்கள் தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை அறிக்கையாகத் தாக்கல் செய்தது. இந்நிலையில் இம்மனு புதனன்று (ஆகஸ்ட் 7) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது. மத்திய அரசுத் தரப்பில் சுற்றுச்சூழல் அனுமதி வரும் வரை 8வழிச் சாலை அமைப்பதற்கான பணியைத் தொடங்கமாட்டோம் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் 8 வழிச்சாலைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது. தொட ர்ந்து வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி இவ்வழக்கில் இறுதி விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

;