அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

அதிமுக கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.
ச.சா - தேர்தல் அறிவிப்பத் தவிர எல்லா அறிவிப்பும் வருதே..??
 

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் :- சிவசேனாவை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை.
ச.சா - பேரம் பேசுறதுக்குதான் பயன்படுத்துறாங்கன்னு தெரிஞ்சு போச்சோ..??
 

தமிழக அமைச்சர் உதயகுமார் :- பேரிடர்களை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது.
ச.சா - மத்திய, மாநில அரசுகள் உருவாக்கி வெச்சுருக்குற சமூக, பொருளாதார பேரிடர்கள எதிர்கொள்ள மக்கள் தயாரா இல்லையே..?
 

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ :- வெங்காயம் குறித்து இரண்டு நாட்களில் மகிழ்ச்சியான செய்தி.
ச.சா - மகிழ்ச்சி இல்லைனாலும் பரவாயில்ல.. தெர்மகோல் மாதிரி எதையும் குடுத்துராதீங்க..!!

;