அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

செய்தி :- ஆளுநர் மாளிகையில் பாஜக-அதிமுக இடையில் உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தை.
ச.சா - ஆளுநர பாஜக மாநிலத்தலைவர் அளவுக்கு ஆக்கிருவாங்களோ..?!?
 

ரயில்வே வாரிய உறுப்பினர் ராகேஷ் அகர்வால் :- மலை ரயிலை தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம்.
ச.சா - லாபம் வர்றத மட்டும்தான் தனியாருக்கு விடுவாங்க....!?!!
 

ஜம்மு - காஷ்மீர் காவல்துறைத் தலைவர் தில்பக் சிங் :- பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை 
ச.சா - என்ன எதிர்பாக்குறீங்க..!!??
 

செய்தி :- வெளிநாடு செல்கிறார் தமிழக முதல்வர்.
ச.சா - தொடர் தோல்விய மறக்குறதுக்கா .??!!

;