கேப்டவுன்
தென்னாப்பிரிக்க நாட்டில் காரூ என்ற பெயரில் தேசிய பூங்கா உள்ளது.நாட்டின் மிக முக்கிய வனப்பகுதியான காரூவில் இருந்து இளவயதுடைய சிங்கம் தப்பியோடியது. சுமார் ஒரு மாதமாக ஜாலியாக வலம் வந்த அந்த சிங்கம் வியாழனன்று பிடிபட்டது.நேரடியாக பூங்காவிற்கு கொண்டு செல்லாமல் ஹெலிகாப்ட்டர் மூலம் சதர்லேண்டு காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து அங்குள்ள சிறையில் (இரவு – மட்டும்) அடைத்தனர்.
சிங்கத்திற்கு தண்டனை வழங்கினார்களா அல்லது இரவு நேர பாதுகாப்பிற்காக சிறையில் வைத்தார்களா என்பது தெரியவில்லை.ஆனால் தப்பு செய்ததற்காக சிறை தண்டனை அனுபவித்த சிங்கம் என உலகம் முழுவதும் செய்தி வைரலாகி வருகிறது.

இந்த விசித்திர சம்பவம் குறித்து சதர்லேண்டு காவல் நிலைய அதிகாரி ஒருவர் அளித்த தகவிலில்,”சிங்கத்துக்கு தற்போது இரண்டு வயதாகும் என்று நினைக்கிறோம்.பெரிதளவு முரண்டு பிடிக்கவில்லை.சிங்கம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது.சீக்கிரமே நாங்கள் சிங்கத்தை பூங்காவில் சேர்த்து விடுவோம்” எனக் கூறினார்.