சென்னை,
வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில்  மார்க்சிஸ்ட் கம்யினிஸ்ட் கட்சி மதுரை, கோவை ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகிக்கிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்த  கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் கோவை ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட உள்ளது