கோவை மக்களவை தொகுதியில் சிபிஎம் வேட்பாளராக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன்(வயது 68) 2019 நாடாளுமன்ற தேர்தலில் கோவைநாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

பி.ஆர்.நடராஜன், கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும்போதே அரசியலில் ஈர்க்கப்பட்டு இந்திய மாணவர் சங்க தலைவராக
பொறுப்பேற்று மாணவர்களின் உரிமைக்கானபோராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். இதனைத்தொடர்ந்து இந்திய ஜனநாயக
வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவராக பொறுப்பேற்று இளைஞர்களின் உரிமைக்காக களம் கண்டவர்.1968ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியின் மாநகர செயலாளராகவும், மாவட்ட செயலாளராக 10 ஆண்டுகளும், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். கட்சியின் முழுநேர ஊழியராக கடந்த 42 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காகவும், கோவை மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காகவும் தொடர்ந்து தலையீட்டை செலுத்துபவராகவும், கோவை மக்களின் அன்பை பெற்றவராகவும் பி.ஆர்.நடராஜன் திகழ்கிறார்.கோவை மாவட்டத்தில் துப்புரவு தொழிலாளர்கள், ஹோட்டல் தொழிலாளர்கள் உட்பட பல்வேறு தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி அவர்களுடைய உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர்.2009ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய ஐந்தாண்டுகளில் கோவை ரயில் நிலையத்தை

தரம் உயர்த்தவும், 11 ரயில்களை அறிமுகப்படுத்தவும், கோவை ரயில்நிலையத்தில் நிற்காமல் நேராக பாலக்காடு சென்ற ரயில்களை கோவை ரயில்நிலையத்தில் நின்று செல்லவும் பெரும் முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டார். கோவை மாவட்ட தொழில்துறையினர், வர்த்த
கர் அமைப்புகள் மற்றும் கேரள மாநில மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டார்.கோவை ரயில் நிலையத்தில் இரண்டாவது சுரங்கப்பாதை, எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் வசதி இவரின் காலத்திலேயே நிறைவேற்றப்பட்டது. பாரதியார் பல்கலைக் கழகம் அமையநிலம் வழங்கியவர்களுக்கான இழப்பீடு நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இவரது முயற்சியின் பயனாகவே முதல் தவணை 42 கோடி ரூபாய், நிலம் கொடுத்த மக்களுக்கு பெற்றுத்தரப்பட்டது.

ரூபாய் 800 கோடி செலவிலான இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி அமையவும், கரும்பு ஆராய்ச்சி நிலைய ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம், தேசிய பஞ்சாலைக் கழக தொழிலாளர்கள் மற்றும் அரசு அச்சக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கான முன்முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை.

நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தபோது தொகுதி வளர்ச்சி நிதியாக ஒதுக்கப்பட்ட 19 கோடி ரூபாயையும் முழுமையாக தொகுதியின் வளர்ச்சிக்காக சமூக நலக்கூடங்கள், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மேம்பாடு உட்பட பல்வேறு திட்டங்களுக்கு செலவு செய்யப்பட்டது.கோவை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசல் குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு, நாடாளுமன்றத்தில் பேசியும்,அரசிடம் எடுத்துக் கூறியும் 8 மேம்பாலங்களுக்கு ஒப்புதல் பெற்று, ஐந்து பாலங்கள் பணி நிறைவுற்றதானது போக்குவரத்து நெரிசலுக்கு ஓரளவிற்கு தீர்வாக அமைந்தது.நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதுதொழிலாளர் நலத்துறை, தகவல் தொழில் நுட்பம், தொழில்துறை ஆகியவற்றின் நிலைக்குழு உறுப்பினராகவும், பெட்ரோலியம் மற்றும்இயற்கை எரிவாயு துறையின் உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

தமிழகத்தின் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி மறைந்த
தோழர் கே. ரமணி அவர்களது மகள் திருமதிவனஜா இவரது துணைவியார் ஆவார். இத்தம்பதிகளுக்கு ஆர்த்தி, அருணா என்ற இரு மகள்கள் உள்ளனர்.