இந்திய அரசின் புள்ளி விவரங்கள் நேர்மையானது அல்ல என்பது துரதிஷ்டவசமானது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் கூறியுள்ளார்.

மத்திய புள்ளியல் துறையின் கீழ் இயங்கும் தேசிய ஆதார ஆய்வு அலுவலகம்(NSSO) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளையும், வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களையும் மாற்றியமைப்பதாக சர்ச்சை எழுந்தது. இதைத்தொடர்ந்து, புள்ளி விவரங்களில் அரசியல் தலையீடு இருப்பதற்கு 108 பொருளாதார நிபுணர்கள் மற்றும் சமூக அறிவியலாளர்கள் அமைப்பின் சுதந்திரத்தை மறு சேகரிப்பு செய்யக்கோரியும், புள்ளிவிவரங்கள் தொடர்பான அமைப்புகளை ஒருங்கிணைக்கக்கோரியும் நேற்று கோரிக்கைகளை எழுப்பியிருந்தனர். மத்திய அரசின் தனக்கு சாதமாக தகவல்களை மாற்றவும், உண்மையான தகவல்களை மறைக்கவும் வழிகோலுவதாக உள்ளது.

இதுகுறித்து, இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், இந்தியாவின் புள்ளி விவரங்கள் தவறானவை. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. உலகம் இந்தியாவை வித்தியாசமாக பார்க்கிறது ஆனால், அதற்கு இந்தியா கூறும் புள்ளி விவரங்கள் மீது நம்பிக்கையில்லை என கபில் சிபில் கூறினார்.

மேலும், 108 பொருளாதார நிபுணர்கள் மற்றும் சமூக அறிவியலாளர்கள் புள்ளி விவரங்களில் அரசியல் தலையீடு இருப்பதற்கு கண்டனம் செய்திருந்ததை தனது டிவிட்டர் பக்கத்தில் செய்திருந்த மற்றொரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.