அன்று அப்பா என்றால்இன்று நான், எனது தந்தைபோட்டியிட்ட குஞ்ஞாலிக்குட்டிக்கு எதிராக நான் போட்டியிடும் நிலை ஏற்பட்டிருப்பது வரலாற்றின் விசித்திரம் என்கிறார் இடது ஜனநாயக முன்னணியின் மலப்புறம் தொகுதி வேட்பாளர் வி.பி.ஷானு. மலப்புறத்தின் தேர்தல் வரலாறு இம்முறை மாறுபட்டதாக இருக்கும். நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலில் மக்களின் தீர்ப்பை கோருவதில் மகிழ்ச்சி தெரிவித்தார் ஷானுவின் தந்தையும், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான வி.பி.சக்காரியா. முஸ்லீம் லீக்அகில இந்தியபொதுச் செயலாளரும் தற்போதைய எம்பியுமான பி.கே.குஞ்ஞாலிகுட்டிக்கு எதிராக வி.பி.ஷானு முதன்முறை வேட்பாளராக போட்டியிடுகிறார். 1991இல் வி.பி.சக்காரியா முதன்முறையாக களத்தில் இறங்கியபோதும் எதிராளிகுஞ்ஞாலிக்குட்டி என்பதுதான் விசித்திரம். குஞ்ஞாலிக்குட்டி குற்றிப்புரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது வி.பி.சக்காரியாஅவருக்கு எதிராக போட்டியிட்டார்.22536 வாக்குகள் அதிகம் பெற்றுகுஞ்ஞாலிக்குட்டி வெற்றிபெற்றார்.

27 ஆண்டுகளுக்குப்பிறகு சக்காரியாவின் மகன் ஷானு எஸ்எப்ஐ, பாலர்சங்கம் ஆகிய அமைப்புகளின் மாவட்ட நிர்வாகியாக பணியாற்றிய அனுபவம் அவருக்கு அறிமுகம் தேவையில்லை என்கிற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இவரது முதல்போட்டி குஞ்ஞாலிக்குட்டிக்கு எதிராக என்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தான் போட்டியிட்டபோதும், தனது மகன் போட்டியிடும்போதும் முஸ்லீம்லீக்கின் வேட்பாளர் குஞ்ஞாலிக்குட்டி தான்என்பது முஸ்லீம்லீக்கின் பலவீனமே என்கிறார் சக்காரியா. இதற்குமேல் ஷானுவின் மகன் போட்டியிட்டாலும் முஸ்லீம்லீக் குஞ்ஞாலிக்குட்டியையே நிறுத்தும் என்பதில் சந்தேகம் வேண்டாம் என்றும் கூறினார்.மலப்புறத்தில் தனது தந்தையுடன் போட்டியிட்ட குஞ்ஞாலிக்குட்டிக்கு எதிராக போட்டியிட நேர்ந்தது வரலாற்றின் விசித்திரம் என்கிறார் ஷானு. அன்று கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினராக இருந்த சக்காரியாவை எதிர்கொண்ட குஞ்ஞாலிக்குட்டி இப்போது எஸ்எப்ஐ அகில இந்தியதலைவரான வி.பி.ஷானுவை எதிர்கொள்கிறார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது பெருந்தல்மன்னயில் மங்கடபகுதியில் பல்வேறு இடங்களில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து சுறுசுறுப்பான தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார் ஷானு. கூட்டுறவுஅமைப்புகளின் தலைவர்கள், வர்க்க வெகுஜன அமைப்புகளின்மாநாடுகளில் பங்கேற்று அறிமுகமான அவருக்கு பிரமுகர்கள் இன்முகத்தோடு வரவேற்பளித்து வாழ்த்து கூறினர்.