இத்தாலியின் குழந்தைகள் முறையாக தடுப்பூசி போட்டு கொண்ட ஆதாரத்துடன் இல்லை என்றால் அவர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதிக்க இல்லை என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட உயர்வையடுத்து நடத்தப்பட்ட தேசிய விவாதங்களை தொடர்ந்து கட்டாய தடுப்பூசி என்ற முடிவு அந்நாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தற்போது அதன் நிலை உயர்ந்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் தடுப்பூசி போட்டு கொள்ளாத குழந்தைகளை பள்ளிகளில் அனுமதிக்க தடைவிதிப்பது என்ற முடிவு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படாமல் பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு 560 டாலர் அபராதம் விதிக்கப்படும் எனவும் புதிய விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.