கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு உலகின் அதிக ஆயுதங்கள் இறக்குமதி செய்யும் நாடு என்ற இடத்திலிருந்து இந்தியாவை சவுதி அரேபியா மாற்றியுள்ளது.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்(SIPRI) என்ற சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று “Trends in International Arms Transfers-2018” என்ற பெயரில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் இந்தியா அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் உலகின் இரண்டாவது நாடு என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா உலகின் மொத்த ஆயுத இறக்குமதியில் 9.5 சதவிகிதத்தை கொண்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வளைகுடா நாடான சவுதி அரேபியா கடந்த 2014-18 ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலகின் மொத்த ஆயுத இறக்குமதி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. சவுதி அரேபியா உலகின் மொத்த ஆயுத இறக்குமதியில் 12 சதவிகிதத்தை கொண்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 36 சதவிகிதத்துடன் முதல் இடத்திலும், ரஷ்யா 21 சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.