அதிமுக – பாஜக கூட்டணியை முறியடித்திட தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினி அகில இந்திய தலைவர்கள்  பிரச்சார பொதுக்கூட்டங்கயில் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

17வது நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக – பாஜக கூட்டணியை
முறியடித்திட மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
சார்பில் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இக்கூட்டத்தில்
கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தராம் யெச்சூரி,
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத்
ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பொதுக்கூட்டம் நடைபெறும் மையம், பங்கேற்கும்

தலைவர்கள் விபரம்:

1. சீத்தாராம் யெச்சூரி, அகில இந்திய பொதுச் செயலாளர்
மார்ச் 8, 2019 – கோவை
மார்ச் 9, 2019 – சென்னை

2. பிரகாஷ் காரத் (அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்)
மார்ச் 10, 2019 – நாகர்கோவில் (மாலை 5 மணி)
மார்ச் 11, 2019 – திண்டுக்கல் (மாலை 4 மணி)
மார்ச் 11, 2019 – மதுரை (மாலை 7 மணி)
மார்ச் 12, 2019 – நெய்வேலி (மாலை 5 மணி)
3. பிருந்தா காரத் (அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்)
மார்ச் 10, 2019 – நாகை
மார்ச் 11, 2019 – கறம்பக்குடி (புதுக்கோட்டை) – மாலை 4 மணி
மார்ச் 11, 2019 – திருச்சி (மாலை 6 மணி)