உயர் முன் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் உயர்மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கைகளை கைவிட்டு அதனை கேபிள் வழியாக நடைமுறை படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு சங்ககிரி படைவீடு பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் சார்பில் தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலை உள்பட 13 மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் விளை நிலங்கள் பாதிக்கப்படும். அங்கு விவசாயப் பணிகளைச் செய்ய முடியாது. எனவே, தேசிய நெடுஞ்சாலையோரங்கள் வழியாக இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தேசிய அளவில் 3600 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1,100 கிலோ வாட் மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை கேபிள் மூலம் நிறைவேற்ற திட்டம் வகுத்து பல மாநிலங்களில் பணி நடக்கிறது. தமிழகத்தில் 800, 400, 230 கிலோ வாட் திட்டங்களை பவர் கிரிட் மற்றும் தமிழக மின்வாரிய செயல்படுத்துகிறது. இதனை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்கள்.


இதில், ஈரோடு சிவகிரி படைவீட்டில் காலவரையற்ற உண்ணா விரதத்தை தொடர்ந்துள்ளனர். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, ஒருங்கிணைப்பாளர்கள் வி.பி.குணசேகரன், ஈசன், கவின் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.