அகர்தலா,
திரிபுரா மாநிலத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி மேடையில் சக பெண் அமைச்சரின் இடுப்பில் அம்மாநில அமைச்சர் கை வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் கடந்த 9-ம் தேதி பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது நடந்த விழாவில் நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த விழாவில் மாநில முதல்வர் பிப்லப் தேப் மற்றும் அமைச்சர்கள் இருந்தனர். அப்போது அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் சந்தனா சக்மாவின் இடுப்பில் சக அமைச்சர் மனோஜ் காந்தி தேவ் கை வைத்து தள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், மனோஜ் பின்னால் நகரும் போது சந்தனாவின் இடுப்பில் கை வைத்து நகர வைக்கிறார். இதைத் எதிர்பாராத சந்தனா, மனோஜ்ஜின் கையை உடனடியாக தட்டி விடுகிறார்.

பிரதமர் இருந்த மேடையிலேயே பெண் அமைச்சரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மனோஜ் காந்தி தேப் பதவி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.