ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், காவல்துறை சார்பில் குழந்தைத் திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த  விழிப்புணர்வு முகாமில்,  மாணவ மாணவிகள் இளவயதுத் திருமணம் மற்றும் பாலியல் தொந்தரவு உள்ளிட்டவைகளில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இந்த முகாமில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் வெண்ணந்தூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார். உதவி ஆய்வாளர் சங்கிதா மற்றும்  300 க்கும் மேற்பட்ட  பள்ளி   மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.