சென்னை, பிப் 11-

ஒருநபர் குடும்ப அட்டைகளுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தப்பட மாட்டாது என்று  உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் திங்களன்று நடந்த கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி எழுப்பிய கேள்வி எழுப்பினார்.  அதற்கு  பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் அனைத்துப் பொருட்களும் ஒரு நபர் குடும்ப அட்டை வழங்கப்படும் என்றும் அது எந்தக் காரணத்தைக் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் அரசின் சலுகைகளைப் பெறுவதற்காக ஒரே குடும்பத்தில் தனித்தனியாக இரண்டு மூன்று குடும்ப அட்டைகள் தனியாக பெற்றுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதன் அடிப்படையில் ஒரு நபர் போலி அட்டைகள் 33 ஆயிரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.