தமிழக சட்டப்பேரவை கூட்டம் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று தொடங்கியது. 2019-20ம் ஆண்டின் பட்ஜெட் மீதான விவாதம் இன்று முதல் நடைபெறுகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ் நாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வசித்துவரும் ஏழைத் தொழிலாளர்களுக்கு சிறப்பு உதவி நிதியாக 2000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கான நிதி துணை நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.