கார்டிப்
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த நான்டஸ் கால்பந்து அணியின் முன்னணி வீரர் எமிலியானோ சலா அந்த அணியுடனான ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில்,வேல்ஸ் நாட்டின் கார்டிப் கிளப் அணி எமிலியானோவை வாங்கியது.கடந்த ஜனவரி மாத இறுதியில் கார்டிப் அணிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஒற்றை என்ஜின் உடையத் தனியார் விமானத்தில் பிரான்ஸ் நாட்டிற்குத் திரும்பி கொண்டிருந்த போது எமிலியானோ பயணித்த விமானம் சேனல் தீவுகளுக்கு அருகே திடீரென மாயமானது.

13 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின்பு கடந்த வாரம் விமானம் விபத்துக்குள்ளான இடத்தை மீட்புக் குழு கண்டறிந்தது.அந்த இடத்தில் அழுகிய நிலையில் உடல் கண்டுபிடிப்பிக்கப்பட்டதால் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டது.டிஎன்ஏ சோதனையில் அது எலிமியானோ சடலம் என அறிவிக்கப்பட்டது.

                                          விமானி…

எலிமியானோ கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்,விமானியைத் தேட பிரான்ஸ் அரசு ஒத்துழைக்கவில்லை எனச் செய்திகள் வெளியாகின.இந்நிலையில்,விமானியைத் தேடும் பணிக்காக அவரது குடும்பத்தினர் நிதி திரட்டி வருகின்றனர்.3 லட்சம் பவுண்டுகள் நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்,ஞாயிறன்று மாலை வரை இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் பவுண்டுகள் (7000-க்கும் மேற்பட்டோரிடம்) வரை நிதி சேர்ந்துள்ளது. அதிகபட்சமாக பிரான்ஸ் கால்பந்து அணியின் இளம் வீரர் மாப்பே 27000 பவுண்டு (இந்திய ரூபாய் மதிப்பில் 24.80 லட்சம்) நிதியுதவி வழங்கியுள்ளார். இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் கேரி லிங்கரும் தன் பங்கிற்கு 1000 (இந்திய ரூபாய் மதிப்பில் 1 லட்சம்) பவுண்டு வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.