நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை விளையாடியது. இதில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20ஓவர் முடிவில் 8விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்தது. 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி இலக்கை கடந்து வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர் தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. அணியின் தலைவர் ரோகித் சர்மா அதிகபட்சமாக 50 ரன்களை எடுத்து தனது 16வது அரை சதத்தை பதிவு செய்தார். தொடரின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் இரு அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகின்ற 10 தேதி நியூசிலாந்தின் சீடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 92 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 2288 ரன்களை எடுத்து உலகின் அதிக ரன்களை எடுத்திருந்த நியூஸிலாந்து வீரர் மார்டின் குப்திலின் (2272 ரன்கள்) சாதனையை முறியடித்துள்ளார்.