மெல்போர்ன்
12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெறுகிறது.இந்த உலகக்கோப்பை கைப்பற்றும் நோக்கில் பல முன்னணி அணிகள் அதிரடி மாற்றங்கள் மூலம் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.  

இந்நிலையில், கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்சியாளராக இருந்த டேவிட் சாகர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.உலகக்கோப்பைக்கு இன்னும் மூன்று மாத இடைவெளி உள்ள நிலையில்,உதவிப் பயிற்சியாளர் பதவி திடீரென காலியானதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்தது.இதையெடுத்து முன்னாள் கேப்டனும்,அதிரடி வீரருமான ரிக்கி பாண்டிங் புதிய உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தொடர் நிறைவடைந்தவுடன் ஆசிய கண்டத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளுக்கு (தனி தனியாக) இடையேயான தொடர்களில் ஆஸ்திரேலியா பங்கேற்கிறது.இந்தத் தொடர் முதல் ரிக்கி பாண்டிங் தனது பொறுப்பை உதவிப் பயிற்சியாளர் ஏற்றுக்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.